தலைப்புச் செய்திகள்

கொழும்பு மாநகர சபை பகுதியில் 400 கோடி ரூபாய்க்கும் அதிக வரித் தொகை நிலுவையில் உள்ளமை அம்பலம்

கொழும்பு மாநகர சபை பகுதியில் 04 பில்லியன் (400 கோடி) ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டு வரி – நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளதாக பொதுக் கணக்குகள் குழு (கோபா – COPA) தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் சமீபத்தில் – கோபா குழுவின் முன்பாக ஆஜரானபோது இது தெரியவந்தது.

முந்தைய பரிந்துரைகள் இருந்தபோதிலும், வரி வசூல் சிறிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது என்றும், கோட்டைப் பிரிவில் மட்டும் ரூ.610 மில்லியனில் ஜூன் மாதத்திற்குள் ரூ.53 மில்லியன் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் கோபா தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் கூறினார்.

மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ், வரி செலுத்தத் தவறியவர்களுக்கு எதிரான சொத்து பறிமுதல் நடவடிக்கைகள் உட்பட, மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மநகர சபை பிரதிப் பொருளாளர் நந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வசூல் செயல்முறையை விரைவுபடுத்தவும், நிலுவைத் தொகை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தாசர் குழுவிடம் உறுதியளித்தார்.