தலைப்புச் செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் நாட்கூலி, இந்த வருடத்துக்குள் வழங்கப்படும்: ஜனாதிபதி உறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் ரூ.1,750 கிடைப்பதை இந்த ஆண்டுக்குள் உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (12) தெரிவித்தார்.

நுவரெலியாவில் இந்திய நிதியுதவியுடன் கூடிய வீட்டுவசதித் திட்டத்தைத் தொடங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்கள் நீண்ட காலமாக ரூ.1,750 நாளாந்த ஊதியத்தைக் கோரி வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“இந்த ஆண்டுக்குள் எப்படியாவது அந்த உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம்” என்று, இதன் போது ஜனாதிபதி உறுதியளித்தார்.