தலைப்புச் செய்திகள்

காஸாவில் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகளும், விவசாயம் செய்ய 25 ஆண்டுகளும் ஆகும்: ஐ.நா தெரிவிப்பு

காஸாவின் இடிபாடுகளை அகற்றுவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என்றும், அங்கு விவசாயம் செய்வதற்கு 25 ஆண்டுகள் ஆகலாம் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் நடத்திய போர் காரணமாக, அங்கு விவசாயத்துறை பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் ஹேக்டேயர் பரப்பளவுள்ள விவசாய நிலத்தில் 232 ஹெக்டேயர் நிலம் மட்டுமே, விவசாயத்துக்கு ஏற்றதாக உள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

ஸ்டோபரி, தக்காளி, வெள்ளரி, மிளகு என ஏற்றுமதிக்கு புகழ்பெற்றிருந்த காஸா, தற்போது மண்ணரிப்பு, ரசாயனக் கலப்பு காரணமாக தரிசு நிலமாகியுள்ளது.

காஸாவின் 23 லட்சம் மக்கள் சனத்தொகையில் சுமார் 90 வீதமானோர், வீடற்ற நிலையில் உள்ளனர் என்றும் ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவில் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு போரில் 18 ஆயிரம் குழந்தைகள் உட்பட, 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவில தற்போது போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.