
நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் விபத்துகளால் காயமடைந்தவர்கள் என்று, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அவற்றில் பல தடுக்கக்கூடியவை என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற விபத்துகளைக் குறைப்பது தேசிய சுகாதார அமைப்புக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று (12) காலை நடைபெற்ற சிறப்பு பொது விழிப்புணர்வு நடைப்பயணத்தின் போது அமைச்சர் இந்த விடயங்களை வெளியிட்டார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சமூகத்தைப் பங்களிக்கச் செய்வதையும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்திய ஊழியர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
நாடு பொருளாதார ரீதியாக முன்னேறும்போது, அனைத்துத் துறைகளிலும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் இதன்போது அ மைச்சர் வலியுறுத்தினார்.
பொதுமக்களுக்கு கல்வி கற்பிப்பதும், சுகாதாரப் பணியாளர்களின் தீவிர ஈடுபாடும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து வைசத்தியசாலைகளின் சுமையைக் குறைக்கும் என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.



