தலைப்புச் செய்திகள்

நாடு முழுவதும் போதைப்பொருள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள்

நாடு முழுவதும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் நேரடியாகப் முறையிடும் வகையில், பொலிஸ் திணைக்களம் இன்று (03) அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி ஹெரோயின், ஐஸ் (மெத்தம்பேட்டமைன்), கொய்ன், கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சட்டவிரோதப் பொருட்களை குறித்து புகாரளிக்க முடியும்.

எனவே, பொதுமக்கள் தற்போது பொலிஸ் துறைகளை மேற்பார்வையிடும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோரின் தொலைபேசிகளுக்கு நேரடியாக விவரங்களை வழங்க முடியும்.

நாட்டில் போதைப்பொருள் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில், இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இவற்றினை பொறுப்புடன் பயன்படுத்துமாறும் பொதுமக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

முறையிடுவதற்கான தொலைபேசி இலக்கங்கள்