தலைப்புச் செய்திகள்

தங்காலை வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு; மூவர் மரணம்

ங்காலையில் வீடு ஒன்றினுள் – சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு நபர்கள் இறந்துள்ளனர். அதேவேளை, அங்கிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டினுள் 10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை – சீனிமோதர பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும், அங்கு இரண்டு பேர் இறந்து கிடந்ததாகவும் – பொலிஸ் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொரு நபர் இறந்தார். எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நபர்களின் மரணங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.