தலைப்புச் செய்திகள்

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 25 வயது சந்தேக நபர் கைது

– தில்சாத் பர்வீஸ் –

வீரமுனை பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை நேற்று (20) சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் முற்றுகையிட்டனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகைக்குள்ளனாது.

வீரமுனை 03 பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவர், இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 60,000 மில்லிலிட்டர் கோடா, கசிப்பு 4,000 மில்லிலிட்டர், ஏ சி கேஸ் சிலிண்டர் 2, ஒரு தொகை ரப்பர் மற்றும் செப்பு குழாய் என்பன மீட்கப்பட்டன.

இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். பிரதிப்குமார தலைமையிலான குழுவினரினால் மேற்கொள்ளப்பட்டது.