
யானையொன்றை அனுமதியின்றி வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரோஷன் எனப்படும் ‘அலி ரோஷன்’ என்பவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு – இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தண்டனைக்கு மேலதிகமாக, 20.6 மில்லியன் ரூபாய் அபராதமும் குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி வைத்திருந்த யானையை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன, ஆர்.எஸ்.எஸ். சப்புவிடா மற்றும் லங்கா ஜெயரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற மூன்று பிரதிவாதிகளையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.



