
காஸா நிலத்தை விற்கும் ரியல் எஸ்டேட் திட்டமொன்று தங்களிடம் உள்ளது என்று, இஸ்ரேலின் நிதியமைச்சர் பெஸலால் ஸ்மோட்சிச் தெரிவித்துள்ளார்.
காஸாவை ரியல் எஸ்டேட் செல்வமாக மாற்றுவது குறித்து, மிகச் சிறந்த தொழில்முறை நபர்களால் அமைக்கப்பட்ட ஒரு வணிகத் திட்டம் உள்ளது என்றும், அது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மேசையில் இருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
“இந்த போருக்காக நாம் நிறைய செலவளித்துள்ளோம். எனவே, காஸாவில் நிலத்தை சந்தைப்படுத்துவதன் மூலம் கிடைப்பதை நாம் பிரித்துக்கொள்ள வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போருக்குப் பிறகு காஸா எப்படியிருக்கும். காஸா முனையில் யூத குடியேற்றத்தைப் புதுப்பிப்பது பற்றி நீங்கள் அடிக்கடி பேசியிருக்கிறீர்கள். உங்கள் கூற்றுப்படி காஸாவில் முதல் குடியேற்றம் நடக்குமா? என, அவரிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மேற்படி விடயங்களை அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
“பெஸலால் ஸ்மோட்சிச் – இஸ்ரேல் நிதியமைச்சர். இதை நான் எதிர்பார்க்கவில்லை.
“இது வேடிக்கையானது அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வணிகத் திட்டம் இருக்கிறது. நன்கு கவனியுங்கள்.
இதனை ரியல் எஸ்டேட் செல்வமாக மாற்றுவது குறித்து, மிகச் சிறந்த தொழில்முறை நபர்களால் அமைக்கப்பட்ட ஒரு வணிகத் திட்டம் உள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மேசையில் உள்ளது.
இது ஒரு நல்ல லாபம் ஈட்டும் வாய்ப்பு. நான் விளையாடவில்லை, இது நிச்சயம் பயனளிக்கும். நான் அமெரிக்கர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளேன். இதை நான் நகைச் சுவைக்காக சொல்லவில்லை.
இந்த போருக்காக நாம் நிறைய செலவளித்துள்ளோம். எனவே, காஸாவில் நிலத்தை சந்தைப்படுத்துவதன் மூலம் கிடைப்பதை நாம் பிரித்துக்கொள்ள வேண்டும். நான் விளையாடவில்லை.

இப்போது நாம் தடை மட்டமாக்கும் பணியை முடித்து விட்டோம். இதுதான் குடியேற்றத்துக்கான முதற்படி. இப்போது நாம் கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும்” என்றார்.
இஸ்ரேல் தலைநகர் – டெல்அவிவ்-இல் நடந்த நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறினார்.



