மஹிந்தவின் பெயரை நீக்க முடியாது: ரணில் பிடிவாதம்

🕔 February 26, 2016

Ranil - 0988Mahinda - 053பொ
து நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகம், மத்தல சர்வதேச விமான நிலையம், சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் பெயரை நீக்க வேண்டும் என பிரதேச அரசியல் பிரதிநிதிகள் , பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், பொது மக்களின் பணத்தில் அமைக்கப்பட்ட எந்த நிர்மாணிப்புகளிலும் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாச ஆகியோர் தமது பெயர்களை சூட்டவில்லை என்றார்.

எவ்வாறாயினும் துறைமுகம், விமான நிலையம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு சூட்டுப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நிராகரித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்