
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று (24) வைத்தியசாலைக்குச் சென்று பார்த்தார் என, ஹிரு செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பிரதமர் சென்றதை – வைத்தியசாலைத் தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரசிங்கவுடன் பிரதமர் ஹரினி சென்றதாகவும், சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு இருந்ததாகவும் வைத்திசாலை தரப்புகள் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மைத்ரி விக்ரமசிங்க, தனது நோய் மற்றும் தனது அன்புக்குரிய கணவரின் கைது தொடர்பில், நேற்று (24) சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.



