
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்தக் கடிதத்தை சமர்ப்பித்தார்.
பொலிஸ் மா அதிபர் பதவிக்காக, அரசியலமைப்பு சபைக்கு ஒருவரை ஜனாதிபதி பரிந்துரைத்தால், அதனையடுத்து பெரும்பான்மை அங்கீகாரத்தின் அடிப்படையில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார்.

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் முன்மொழிவு குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்டன, எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தார்.
தொடர்பான செய்தி: பதவி நீக்கப்பட்டார் தேசபந்து: நாடாளுமன்ற வாக்கெடுப்பில் எவரும் கருணை காட்டவில்லை



