
ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப் பரிசில் ஊடாக பணம் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் விவரங்களை நேற்று (05) நாடாளுமன்றில், அமைச்சர் அனுர கருணாதிலக்க வெளியிட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண, தனது தந்தை எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது, நிறுவப்பட்ட முறையின் கீழ் தான் தகுதி பெற்றதாகக் கூறி, அரசாங்க உதவித்தொகையைப் பெற்றதை ஒப்புக்கொண்டார்.
“அப்போது எனது தந்தை எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தார். என்னையும் மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இழிவுபடுத்துவதற்காக – அரசாங்கம் வேண்டுமென்றே இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியது தெளிவாகிறது” என்றும் அவர் கூறினார்.

பட்டப்படிப்பை முடித்த பிறகு, முதுமாணி படிப்புகளுக்கான அரசாங்க உதவித்தொகைக்கு விண்ணப்பித்ததாகவும், நேர்காணலுக்குப் பிறகு ரூ. 500,000 பெற்றதாகவும், அவரது தகுதிகளின் அடிப்படையில் அவர் விளக்கினார்.
“அந்த ஆண்டு ரூ. 73 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டதாக அமைச்சரே கூறினார், ஆனால் எனது பெயரை மட்டுமே அவர் குறிப்பிட்டார்” என கூறிய ஹர்ஷன எம்.பி, “உதவித்தொகை பெற்ற மற்றவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை” என்றார்.
இதன்படி தனது அரசியல் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த விஷயத்தை கவனிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.ஷ
தொடர்பான செய்தி: ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப் பரிசில்களைப் பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளின் உறவினர்கள் தொடர்பில் தகவல்


