
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை – லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை நுகேகொடையில் உள்ள அவரின் இல்லத்தில் வைத்து கைதானார்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டத்தின் போது, தீக்கிரையாக்கப்பட்ட செவனகல – கிரியிப்பன் வேவ பகுதியிலுள்ள அரசாங்க இடத்துக்கு, மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ – லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சமல் ராஜபக்ஷவின் புதல்வராவார்.



