தலைப்புச் செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், கல்முனை மஹ்மூத் மகளிர் பாடசாலையில் விழிப்புணர்வு நிகழ்வு

– நூருல் ஹுதா உமர் –

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வொன்று கல்முனை மஹ்மூத் மகளிர் பாடசாலையில் (தேசிய பாடசாலை) மாணவிகளுக்கு நேற்று (23) நடத்தப்பட்டது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு – பாடசாலை அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் பிரதான வளவாளராக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவின் பொறுப்பதிகாரியான ஏ.எல்.ஏ. வாஹீத் கலந்து கொண்டார்.

இந்த செயலமர்வில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல் அதிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல், துஷ்பிரயோகத்தின் வகைகள், அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு கையாளுதல், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான சட்டங்கள் மற்றும் நடைமுறையை அறிந்து கொள்ளுதல் என்பது பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு குழு தலைவர், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.