
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய சந்தேக நபர் – இன்று (25) அதிகாலை விசேட படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கஹதுடுவ – கடெல்லவிட்ட பிரதேசத்திலுள்ள பலகம பகுதியில், கைவிடப்பட்ட வீடொன்றை இன்று அதிகாலை 4:30 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர்.
இதன்போது படையினர் மீது, சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதனையடுத்து அதிரடிப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் துப்பாக்கித் தாக்குதல்களின் போது, அதிரடிப் படை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில், தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேக நபரின் உடல் பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.



