
கந்தானை பகுதியில் இன்று (03) நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சமீர மனஹர, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
இருப்பினும், சமீர மனஹரவுடன் பயணித்த உபாலி குலவர்தன என்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிரிழந்தார்.
இன்று காலை கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் – மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காரில் இருந்த இருவர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஒருவர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



