தலைப்புச் செய்திகள்

அமெரிக்க மேலாதிக்கத்தையும் சியோனிச ஆணவத்தையும் எதிர்கொள்வதில் புதிய வரலாற்று தொடக்கம்: ஈரானின் வெற்றி குறித்து பாராட்டு

ஈரான் – இஸ்ரேல் போரில் 610 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 4,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டதாக உத்தியோபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன என, அல் ஜசீரா கூறியுள்ளது.

இது இவ்வாறிருக்க, இஸ்ரேல் மீது ஈரான் ‘தெய்வீக வெற்றியை’ அடைந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

12 நாட்கள் போரின் போது இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தொடங்கிய துல்லியமான மற்றும் வேதனையான தாக்குதல்களிலும், அதன் அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலுக்கு வழங்கிய மின்னல் பதிலடியிலும் – ஈரானின் இந்த வெற்றி வெளிப்பட்டது என்று ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.

“இது அமெரிக்க மேலாதிக்கத்தையும் சியோனிச ஆணவத்தையும் பிராந்தியத்தில் எதிர்கொள்வதில் – ஒரு புதிய வரலாற்று கட்டத்தின் தொடக்கத்தைத் தவிர வேறில்லை” என்றும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.