தலைப்புச் செய்திகள்

சிறுவர்களிடையே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகரிப்பு

இலங்கை சிறுவர்களிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வரும் போக்கு குறித்து சுகாதார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் மோனிகா விஜேரத்ன; நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நிலைமைகள் பாடசாலை வயது குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருவதாக தெரிவித்தார்.

1, 4, 7 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 7% மாணவர்கள் அதிக எடையுடன் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், 2024 தேசிய ஊட்டச்சத்து மாதத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி – டொக்டர் மோனிகா விஜேரத்ன குறிப்பிட்டார்.

அதே ஆண்டு 13–17 வயதுடைய சிறுவர்களிடையே நடத்தப்பட்ட உலகளாவிய சுகாதார ஆய்வில், 3% பேர் உடல் பருமனாகவும் 12% பேர் அதிக எடையுடனும் இருப்பதாக அவர் கூறினார்.

17% சிறுவர்கள் சர்க்கரை பானங்களை உட்கொள்கின்றன். 28–29% சிறுவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்கின்றனர். 41% குழந்தைகள் அதிக சர்க்கரை உணவுகளை உட்கொள்கின்றனர். 28% பேர் உப்பு நிறைந்த சிற்றுண்டிகளை உட்கொள்கின்றனர் என்று டொக்டர் மோனிகா விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

“இந்த முறைகள் – சிறுவர்களின் உணவுப் பழக்கம் சிறந்ததல்ல என்பதைக் காட்டுகின்றன” என்று டொக்டர் மோனிகா விஜேரத்ன மேலும் கூறினார். “இதன் விளைவாக, இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.