தலைப்புச் செய்திகள்

ஈரான் வெளிவிவகார அமைச்சருக்கும் மேற்கு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

ரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சிக்கும் – பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது சுவிஸர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அரக்ச்சி வந்துள்ளார் என, அல் ஜெசீரா தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, மேற்கத்திய மற்றும் ஈரானிய பிரதிநிதிகளுக்கு இடையேயான முதல் நேரடி சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பு முன்னதாக, ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் வரை, அமெரிக்காவுடன் “விவாதிக்க எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தைகளுக்காக இல்லை என்றாலும், மற்றவர்களுடன் “கலந்துரையாடுவதற்கு” கதவுகள் திறந்திருக்கும் என்றும் அரக்ச்சி கூறியுள்ளார்.

வாஷிங்டனில் சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சுவிஸர்லாந்து சென்ற இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி, “அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு ராஜதந்திர தீர்வை எட்டுவதற்கான ஒரு சாளரம் இப்போது திறந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.