தலைப்புச் செய்திகள்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அரைச் சம்பளம் வழங்க தீர்மானம்

சிறைச்சாலைfள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு, அவருடைய சம்பளத்தில் பாதியை வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கிகரித்துள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ – இந்த விடயத்தை இன்று (11) உறுதிப்படுத்தினார்.

மே மாதம் வெசாக் போயா தினத்தன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியை சட்டவிரோதமாக விடுவிப்பதற்கு உதவியதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், திங்கள்கிழமை (09) துஷார உபுல்தெனியவை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.

இதற்கு முன்னர், திங்கட்கிழமையன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.