தலைப்புச் செய்திகள்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி

னாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளை விடுவிக்கும் போது, மன்னிப்பு வழங்கப்படாத கைதிகளை அனுமதியின்றி விடுவித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை இன்று (09) முடிவு செய்துள்ளது.

துஷார உபுல்தெனிய – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (சிஐடி) நேற்று (8) – 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டார்.

சில கைதிகளை சட்டவிரோதமாக விடுவிக்க வசதியாக, ஜனாதிபதி மன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, ஜனாதிபதி செயலகம் தாக்கல் செய்த முறைப்பாாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.

வெசாக் போயா தினத்தன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதாகக் கூறி, மன்னிப்பு வழங்கப்படாத ஒரு கைதி விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் நேற்று சிஐடியால் கைது செய்யப்பட்டார்.

தொடர்பான செய்தி: ஜனாதிபதியின் மன்னிப்பு பட்டியலில் பெயர் இல்லாத சிறைக் கைதி விடுவிக்கப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் அறிக்கை