
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் எம்.எச்.ஆர். அஜித் என்பவரை இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் நேற்று மாலை (08) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 388 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, பொதுமன்னிப்பு வழங்கப்படாத கைதியொருவரும் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இவர் கைதானால்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பிரிவு, ஜூன் 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தால் குற்றப் புலனாய்வுத் திணைக்களளத்துக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, வெசாக் தினத்தன்று ஜனாதிபதி மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி – ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முந்தைய சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டவர்களில், மன்னிப்பு வழங்கப்படாத கைதிகளும் அடங்குவர் என்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்பான செய்தி: சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி



