
குஷ் வகை கஞ்சாவை இன்று (19) நாட்டுக்குள் கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், சுமார் 79 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் கஞ்சாவை கடத்தியதற்காக, இன்று அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், குறித்த நபரை கைது செய்தனர்.
21 வயதான தாய்லாந்து நாட்டவரான சந்தேக நபர், தாய்லாந்தில் குஷ் கஞ்சாவை வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்து, பின்னர் சுங்க அதிகாரிகளின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியில் நள்ளிரவு 12 மணிக்கு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH-179 மூலம் பண்டாரநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.
அவருடைய பொருட்களில் இனிப்புகள் அடங்கிய பல பக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 7 கிலோகிராம் 910 கிராம் குஷ் கஞ்சாவை, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்தபோது, அவரைக் கைது செய்தனர்.
சந்தேக நபரையும் குஷ் கஞ்சாவையும் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் பணியகத்திடம் விமான நிலைய பொலிஸார். ஒப்படைத்துள்ளனர்.



