தலைப்புச் செய்திகள்

2023ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியால் 15 வீதத்துக்கும் அதிகமானோர் வேலை இழப்பு

நாட்டில் 2023ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், இலங்கையர்களில் மொத்தம் 15.1% பேர் வேலை இழந்ததாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெண்களை விட பொருளாதார நெருக்கடி காரணமாக ஆண்களில் அதிக சதவீதத்தினர், தங்கள் முக்கிய அல்லது இரண்டாம் நிலை வேலைகளை இழந்துள்ளதாகத் திணைக்களத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தக் காலகட்டத்தில், நாட்டில் 60.5% குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்து, புள்ளிவிவரத் திணைக்களம் நடத்திய – வீட்டு கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிக்கையின்படி, 91.1% குடும்பங்களின் சராசரி மாதாந்க செலவுகள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் 5.3% குடும்பங்களின் செலவுகள் மாறாமல் உள்ளன.

பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் 22% குடும்பங்கள் கடனில் மூழ்கியுள்ளன. மேலும் 7% மக்கள் சரியான சுகாதார சிகிச்சையைப் பெறவில்லை என்று கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.