
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் – முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இன்று (17) நாரஹேன்பிட்டவில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் வாகனத்தை வழிமறித்து, பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி வானத்தை நோக்கியும் வாகனத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது துசித ஹல்லொலுவ தாக்கப்பட்டதாகவும், அவரிடமிருந்த ரகசிய கோப்பு தாக்குதலின் போது பறித்துச் செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வாகனத்தில் இருந்த சட்டத்தரணி தினேஷ் தொடங்கொடவும் இந்த சம்பவத்தில் காயமடைந்தார்.
துசித ஹல்லொலுவவிடம் சிஐடியினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க – கிரீஸ் நாட்டில் ஒரு பெரிய முதலீட்டை செய்துள்ளதாக அவர் கூறியமை தொடர்பில் குறித்த விசாரணை நடந்து வருகிறது.



