
இருபத்தொரு வயது இளைஞர் ஒருவரை 2012 ஆம் ஆண்டு மட்டக்குளியவில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில்கொடூரமாக கொலை செய்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்ட, ஐந்து நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) மரண தண்டனை விதித்தது.
குற்றம் நடந்தபோது சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட 18 வயதுக்குட்பட்ட மேலும் இரண்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு மட்டக்குளிய, தோட்டுபொல சாலையில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை மோதலின் போது, விக்கெட் பொல்லுகள் மற்றும் கம்பிகளால் திருமணமாகாத இளைஞரான பிரான்சிஸ் சுரஞ்சன் குரூஸ் என்பவரை அடித்துக் கொலை செய்தது உட்பட மூன்று குற்றங்களைப் புரிந்ததாக பிரதிவாதிகளுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தந்தை மற்றும் மகன் என்றும், வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மற்றைய இரண்டு நபர்கள் விசாரணையின் போது இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செப்டம்பர் 26, 2012 அன்று, கொலை உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை சுமத்தி, சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார்.



