
சீனாவின் ‘கிங்டாவோ சீவின் பயோடெக்’ நிறுவனத்திடமிருந்து 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரத் தொகுதியை இறக்குமதி செய்த வழக்கில், விவசாய ராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மஹேஸ் கம்மன்பில விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது ஊவா மாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றுகின்றார்.
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (28) அவரைக் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியது.
மேற்படி நிறுவனத்திடமிருந்து தரமற்ற இயற்கை உரத் தொகுதியை வாங்குவதற்காக இடைநிறுத்தப்பட்ட கடன் கடிதங்களை – மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தமையின் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போJ முதல் தொகுதி உரத்தின் மதிப்பில் 75% செலுத்தப்பட்டது. அதன் பெறுமதி சுமார் 6.9 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது இலங்கைப் பெறுமதியில் 207 கோடி ரூபாயாகும்
விவசாய அமைச்சின் மேலதி செயலாளராக முன்னர் பணியாற்றிய மஹேஸ் கம்மன்பில இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே, அவரை மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மேற்படி சீன நிறுவனத்துக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது.



