
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வந்துள்ளார்.
ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடைபெறும் விசாரணைக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் வந்துள்ளார் எனத் தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தனது பதவிக் காலத்தில் அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கியிருந்தார்.
அந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.



