
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் – நிஷாந்த அனுருத்த வீரசிங்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அந்த இடத்துக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று (21) சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அமைச்சின் கீழ், உயர்மட்ட பதவிகளில் உள்ளோர் தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருகின்றனர். அதில் இந்த ராஜிநாமா சமீபத்தில் நடந்துள்ளது. முன்னர், இலங்கை போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் ரமல் சிறிவர்தன, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுத் தலைவர் டொக்டர் பந்துல திலீப விதாரண மற்றும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர் டொக்டர் ருவன் விஜயமுனி ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.
வீரசிங்கவின் ராஜினாமாவுடன், போக்குவரத்து அமைச்சுடன் இணைக்கப்பட்ட 06 முக்கிய நிறுவனங்களில் 04 இன் உயர் அதிகாரிகள் சமீபத்தில் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை – வருவாய் ஈட்டும் முதல் ஐந்து அரசு நிறுவனங்களில் ஒன்றாக உயர்த்திய பெருமை அனுருத்த வீரசிங்கவுக்கு உண்டு என செய்திகள் கூறுகின்றன.



