தலைப்புச் செய்திகள்

நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு

உள்ளூராட்சித் தேர்தலின் பொருட்டு நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்லின் பொருட்டு நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்குமாறு கடந்த வாரம் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஏற்கனவே, குறித்த வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும் – அவற்றினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்ததது.

குறித்த மனுக்களை விசாரிப்பதற்கான அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என சட்ட மா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டமையை ஏற்றுக் கொண்டு – அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதனையடுத்து, குறித்த மனுதாரர்கள் தமது மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.