தலைப்புச் செய்திகள்

கிழக்கில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழு; விசாரணைகளையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் நலிந்த

கிழக்கு மாகாணத்தில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழு பற்றிய விசாரணைகளைத் தொடர்ந்து – அந்தக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழுவிடம் பற்றி – ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழு குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கில் செயல்படும் முஸ்லிம் தீவிரவாதக் குழு குறித்து தகவல் கிடைத்துள்ளதாக முன்னர் நடைபெற்ற – அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சர் நலிந்த கூறியிருந்தார்.

இந்தக் குழு பற்றிய மேலதிய விவரங்களைக் கண்டறிய புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி சில தகவல்களையும் வழங்கினார் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.