
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிறைச்சாலை நூலக்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறை அதிகாரிகளிடம் இரண்டாவது முறையாக கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவருக்கு இப்போது நூலகத்தைப் பயன்படுத்துவதற்கான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன், தற்போது தும்பர சிறைச்சாலையில் உள்ள ‘கே வார்டின்’ மேல் மாடியிலுள்ள தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தகவல்களின்படி, ‘கே வார்டின்’ மேல் மாடி அறைகளில் – வேறு எந்த கைதிகளும் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக அவர் தனியாக வைக்கப்பட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோன் மற்ற உயர்மட்ட கைதிகளைப் போலல்லாமல், தங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தவில்லை என்று – தும்பர சிறைச்சாலையின் சிறை அதிகாரிகளும் கருத்து தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 05 நாட்களாக அவர் தனது சிறை அறையில் அமைதியாக இருந்ததாகவும், சிறை அதிகாரிகளிடம் இரண்டாவது முறையாக கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவருக்கு இப்போது நூலகத்தைப் பயன்படுத்தும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஏற்கனவே 05 நாட்களுக்குள் 05 புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டார் என, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களில் சி.ஐ.டி அதிகாரிகள் சிறைக்குச் சென்று அவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஏற்கனவே, அவருக்கு வெளியிலிருந்து மூன்று வேளை உணவைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு விளக்க மறியல்



