
நாட்டில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட விந்தணு வங்கியில் கிட்டத்தட்ட 40 நன்கொடையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலையில், இந்த விந்து வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விந்தணு தானம் தொடர்பாக வைத்தியசாலை தினமும் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புக்களைப் பெறுவதாகவும், ஆர்வமுள்ளவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அஜித் குமார தண்டநாராயணா தெரிவித்துள்ளார்.
இந்த விந்தணு வங்கி டிசம்பர் 4 ஆம் திகதி தொடங்கப்பட்டது.
“இந்த முயற்சியின் முதன்மை நோக்கம் குழந்தையின்மையினால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு குழந்தைகளைப் பெற உதவுவதாகும். அதன்படி, விந்தணு தானம் செய்ய முன்வரும் ஆண்கள் – பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
விந்தணு தானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் 0112 67 89 99 / 0112 67 22 16 எனும் தொலைபேசி எண்கள் ஊடாகத் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.



