
வர்த்தகர்களை தொலைபேசி மூலம் மிரட்டி, இணையம் மூலம் பணம் அனுப்புமாறு வற்புறுத்திய இரண்டு சந்தேக நபர்களை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவ கைது செய்துள்ளது.
பேலியகொடயில் உள்ள ஒரு வர்த்தகரை சந்தேக நபர்கள் மிரட்டி, இணையம் மூலம் 100,000 ரூபாயை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யமாறு மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல முறைப்பாடுகளைத் தொடர்ந்து, தெய்யந்தர பொலிஸ் பிரிவுக்குள்பட்ட சீனிகல்ல கிழக்கு பகுதியில் – சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
42 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபர்கள் தெய்யந்தர மற்றும் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ஒன்றுடன் ஐந்து தோட்டாக்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மற்றும் 9 மிமீ தோட்டாக்களின் பத்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.



