
யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினர் – நேற்று (22) இரவு கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள களியாட்ட விடுதியின் பாதுகாவலர்களுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினர், களியாட்ட விடுதியின் பாதுகாப்பு அதிகாரியுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரி மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
சந்தேக நபர்கள் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றனர்.
தாக்குதலுக்குள்ளான பாதுபாப்பு உத்தியோகத்தர் சம்பவத்தை அடுத்து – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தாக்குதல் தொடர்பான சிசிரிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
சிசிரிவி காட்சி



