
கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் – விந்தணு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் முதல் விந்தணு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு தீர்வு வழங்கும் நோக்கில், விந்தணு வங்கி அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு – காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயணா தெரிவித்துள்ளார்.
குழந்தையின்மையால் அவதிப்படும் பெற்றோருக்கு உதவ விரும்பினால், விந்தணு வங்கியின் தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் எனவும் அஜித் தன்தநாராயணா கூறியுள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0112 67 89 99 / 0112 67 22 16



