தலைப்புச் செய்திகள்

மோசடியாகப் பெறப்பட்ட அரச சொத்துக்களை மீட்க புதிய சட்மூலம்

டந்த அரசாங்கங்களின் கீழ் சட்டவிரோதமாகவோ அல்லது முறையற்ற வகையிலோ கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை மீட்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டமூலத்தை – நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி சமர்ப்பிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 08ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட லாபத்திற்காக அரச வளங்களை தவறாகப் பயன்படுத்திய தனிநபர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிதிகளை சட்டப்பூர்வமாக பறிமுதல் செய்வதை எளிதாக்க இந்த சட்டம் முயற்சிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த நாட்டின் முந்தைய ஆட்சியாளர்கள், அவர்களின் நெருங்கிய கூட்டாளிகள், உறவினர்கள் மற்றும் அரசியல் கூட்டாளிகளுடன் சேர்ந்து – அரச சொத்து, வளங்கள் மற்றும் பொது நிதியை பல்வேறு வழிகளில் தவறாகப் பயன்படுத்தி, அவற்றை தனிப்பட்ட சொத்துக்களாக மாற்றியுள்ளனர். இந்த மூலம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும். இந்த சட்டமானது அத்தகைய சட்டவிரோதமாகச் சம்பாதித்த செல்வத்தை மீட்டெடுக்க அனுமதிக்கும்” என்றும் அவர் விபரித்தார்.

பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் – தேசிய மக்கள் சக்தி உறுதிபூண்டுள்ளது எனவும் அவர் உறுதிவழங்கினார்.