
பல்லேகலையில் உள்ள தும்பர சிறைச்சாலையில் தற்போது பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க – பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாக திணைக்களம் கூறியுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் – ஆரம்பத்தில் ஒரு நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர் அவர் மறுநாள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு ஏப்ரல் 03ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில், கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



