தலைப்புச் செய்திகள்

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒரேயொரு எம்.பி ஆதரவு

ரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரேயொருவர் வாக்களித்தார்.

இலங்கை தொழிலாளர் கட்சியைக் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் இவ்வாறு ஆதரவாக வாக்களித்தார்.

இந்த வாக்கெடுப்பு நேற்று (21) நாடாளுமன்றத்தில் 114 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடைபெற்ற மேற்படி இறுதி வாக்கெடுப்பில், வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைத்தன.

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.