தலைப்புச் செய்திகள்

தேசபந்து தென்னகோனின் மனைவி, மகன் வீடு திரும்பினர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தேசபந்து தென்னகோனின் மனைவியிடமிருந்து பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இருந்தபோதிலும், தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகம – பெலேனாவில் உள்ள W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தேசபந்து தென்னகோன் மற்றும் 08 பொலிஸாரை கைது செய்யுமாறு, பெப்ரவரி 28ஆம் திகதியன்று மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணையைப் பிறப்பித்தது.

தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் கடந்தும், அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான வீடியோ பதிவு