தலைப்புச் செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நளீம் ராஜிநாமா செய்கி-றார்

– மப்றூக் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் – தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜிநாமா செய்யவுள்ளார். ‘புதிது’ செய்தித்தளத்திடம் அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று (14) நாடாளுமன்றத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தான் உரையாற்றவுள்ளதாகவும், அதன்போது, தனது ராஜிநாமா குறித்து தெரிவிக்கவுள்ளதாகவும் நளீம் எம்.பி கூறினார்.

இதனையடுத்து நாளைய தினம் – நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கிணங்க – தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் அவர் கூறினார்.

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் நளீம் – ஏற்கனவே பதவி வகித்தவர் என்பது நினைவுகொள்ளத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் மூலமாக, எம்.எஸ். நளீம் நாடாளுமன்றம் நுழைந்தார்.

இதையும் பாருங்கள்