தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க புதியவர்கள் தகுதி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 01 லட்சத்து 55,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வாக்காளர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்டவர்களைத் தவிர்ந்த வேறு வாக்காளர்கள் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒக்டோபர் 1, 2024 மற்றும் பிப்ரவரி 1, 2025 ஆகிய திகதிகளில் சான்றளிக்கப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் – மேற்படி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மொத்தம் 01 கோடியே 7 லட்சத்து 29,330 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நாளை (12) முடிவடையும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.