தலைப்புச் செய்திகள்

முன்னாள் IGP தேசபந்து தென்னகோன், தனக்கு எதிரான பிடியாணைக்கு தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது சட்டப் பிரதிநிதிகள் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், மாத்தறை நீதவான் நீதிமன்றம் தனக்கு எதிராக பிறப்பித்த பிடியாணையை நிறுத்தி வைக்க இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகம – பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய – மாத்தறை நீதவான் நீதிமன்றம் சமீபத்தில் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த மனு இன்று (10) மேல்முறையீட்டு நீதியரசர் பதில் தலைவர் முகமது லாபர் தாஹிர் மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

பின்னர், மனுவின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னர், மார்ச் 12 ஆம் திகதி மனுவை மேலும் பரிசீலிக்க நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது

தொடர்பான பதிவு