
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி – மாவட்டத்தில் கணிசமான எண்ணிக்கையிலான இளம் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
கட்சியின் வேட்பாளர் பட்டியலில் பெண்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகள், உள்ளடக்கியிப்பதாகவும் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



