தலைப்புச் செய்திகள்

ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்குதல் சம்பவம்: 17 வருடங்களின் பின்னர் இருவர் கைது

கீத் நொயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது…

டகவியலாளர் கீத் நொயர் 2008ஆம் ஆண்டு மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (01) நவகத்தேகம மற்றும் எலயபத்துவ பகுதிகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

42 மற்றும் 46 வயதுடைய சந்தேக நபர்கள் இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உத்தியோகத்தர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு மேலதிகள விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ஊடகவியலாளர் கீத் நொயர் 2008 மே 22 அன்று தெஹிவளையில் உள்ள வைத்யா வீதியில் வைத்து கடத்தப்பட்டார். அதன் பிறகு அவர் தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.