தலைப்புச் செய்திகள்

பயணிகள் பஸ்ஸில் இருந்து 113 துப்பாக்கி ரவைகள் மீட்பு: சந்தேக நபர் பிடிபடவில்லை

கொழும்பிலிருந்து பதுளைக்குச் சென்ற பயணிகள் பஸ் ஒன்றிலிருந்து 123 துப்பாக்கித் தோட்டாக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பயணிகளின் பொதிகள் வைக்கப்படும் பஸ்ஸின் மேல் பகுதியில், ஒரு பைக்குள் சிறிய உலோகப் பெட்டியில் குறித்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து பதுளைக்குச் சென்ற பஸ் ஒன்று – பண்டாரவளை பஸ் நிலையம் அருகே நேற்று (22) மதியம் சோதனை செய்யப்பட்டது.

இதன்போது, 123 துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் சந்தேக நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை.

இவற்றில் 113 ரவைகள் பிஸ்டல் துப்பாக்கி உரியவை ரவைகள், ரி-56 துப்பாக்கிக்குரிய 9 ரவைகள் மற்றும் ரி-56 எல்எம்ஜி துப்பாக்கிக்குரிய ஒரு ரவை ஆகியவை அடங்கும்.

சந்தேக நபரைக் கைது செய்ய பண்டாரவளை பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.