
தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் நடைபெறும் என, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) வரவு – செலவுத் திட்ட உரையின் போது தெரிவித்தார்.
“பருவ கால உணவுப் பொதியை சலுகை விலையில் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிகரித்த வாழ்க்கைச் செலவை தாங்கிக் கொள்ளும் வகையில் அத்தியவசியப் பொருட்களை சலுகை விலையில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் வசதியளித்துள்ளது”.
“இதனடிப்படையில் எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக – அரிசி, தகரத்தில அடைக்கப்பட்ட மீன், பருப்பு, வெங்காயம், கிழங்கு மற்றும் கருவாடு உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்களைக் கொண்ட உணவுப்பொதியொன்றினை வழங்கவுள்ளோம்.
இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 1000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கும் முன்மொழிகின்றோம்”. என்று கூறிய ஜனாதிபதி, “தேர்தல் அதற்கு முன்னர் வரவிருக்கின்றது” என்றார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் யோசனைகளை முன்வைத்து வரும் நிலையில், ஜனாதிபதி அதனை இன்று உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.



