
இந்தியாவின் ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனம் – இலங்கையில் தனது 01 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை மதிப்பில் இந்தத் திட்டத்தின் தொகை 29640 கோடி ரூபாயாகும்.
தனது திட்டத்துக்காக பெரும்பாலான அனுமதிகளைப் பெற்றிருந்தாலும், சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
விதிமுறைகளை தீர்மானித்துக் கொள்வதற்காக புதிய குழு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இலங்கையின் முதலீட்டு சபைக்கு “மரியாதையுடன் விலகும்” முடிவை அதானி கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் அதானி குழுமத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.



