
புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உச்ச நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக சனத் குமநாயக்கவும் கலந்து கொண்டார்.



